பாஜக கட்டுப்பாட்டில் அதிமுக சென்றுவிட்டது; திருமாவளவன்
திண்டிவனத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.;
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் அதிமுகவை ஆர்.எஸ்.எஸ். வழிநடத்தினால் என்ன தவறு என்று பாஜக மூத்த தலைவர் எல்.முருகன் கூறியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அந்த கேள்விக்கு பதில் அளித்த திருமாவளவன் கூறுகையில்,
அதிமுக பாஜக, ஆர்.எஸ்.எஸ். கட்டுப்பாட்டில் சென்றுவிட்டது என்பதற்கு இதுவே சான்று. அதிமுகவை பெரியார் வழிவந்த திராவிட இயக்கம் என்று தமிழகம் நம்பிக்கொண்டிருக்கிறது. ஆனால் அந்த இயக்கத்தை கோல்வார்கர், சாவர்கர் வழிவந்தவர்கள் வழிநடத்தலாம், அவ்வாறு வழிநடத்தினால் தவறில்லை என்று சொல்லக்கூடிய அளவிற்கு நிலைமை மாறியுள்ளது கவலையளிக்கிறது. அதிமுக பொதுச்செயலாளர்தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும்.
என்றார்.