அஜித்குமார் கொலை வழக்கு: இறுதி விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய சிபிஐக்கு கால அவகாசம்

அஜித்குமார் கொலை வழக்கில் இறுதி விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய சிபிஐக்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.;

Update:2025-09-24 18:47 IST

மதுரை,

சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோவில் காவலாளியாக இருந்த அஜித்குமார், நகை மாயம் குறித்த புகார் தொடர்பாக போலீஸ் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு தாக்கப்பட்டதில் இறந்தார். இந்த சம்பவம் தொடர்பாக 5 போலீசார் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது. விசாரணைக்கு பின்னர், இந்த வழக்கில் போலீஸ் வாகன டிரைவர் ராமச்சந்திரனும் சேர்க்கப்பட்டார். மதுரை மாவட்ட தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் குற்றப்பத்திரிக்கையை சி.பி.ஐ. தாக்கல் செய்தது. கடந்த 19-ந் தேதி, கைதான போலீஸ்காரர்களுக்கு குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது.

இந்த நிலையில், இந்த வழக்கு மதுரை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அஜித்குமார் கொலை வழக்கின் விசாரணை முறையாக நடைபெற்று வருகிறது என்று நிலை அறிக்கையில் சிபிஐ தெரிவித்தது. இதனை பதிவு செய்துகொண்ட நீதிபதி அஜித்குமார் கொலை வழக்கில் இறுதி விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய சிபிஐ-க்கு 6 வாரம் கால அவகாசம் வழங்கி உத்தரவிட்டார்.

மேலும் நிகிதாவின் நகை திருட்டு புகாரையும் விசாரித்து 6 வாரத்திற்குள் இறுதி குற்ற பத்திரிக்கையை தாக்கல் செய்யவும் நீதிபதி உத்தரவிடப்பட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்