சி.பி.ராதாகிருஷ்ணனை அனைத்து எம்.பிக்களும் ஆதரிக்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி
தமிழகத்தை சார்ந்த சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு துணை ஜானாதிபதி தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு கிடைத்துள்ளது.;
திருவண்ணாமலை,
அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் சென்று பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், இன்று திருவண்ணாமலைக்கு வந்த எடப்பாடி பழனிசாமி, அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.
இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், பேசியதாவது;
தமிழகத்தை சார்ந்த சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு துணை ஜானாதிபதி தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு கிடைத்துள்ளது. தமிழகத்தை சார்ந்த அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும், சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு வாக்களிக்க வேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன். இது தமிழகத்துக்கான வாய்ப்பு.”
இவ்வாறு அவர் கூறினார்.