பாமக நிறுவனர் ராமதாசின் தைலாப்புரம் இல்லத்திற்கு அன்புமணி வருகை

தனது தாய் சரஸ்வதியை பார்ப்பதற்காக அன்புமணி ராமதாஸ் வருகை தந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.;

Update:2025-07-10 20:29 IST

விழுப்புரம்,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கும், அவரது மகனும் பா.ம.க. தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாசுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. கட்சியில் முழு அதிகாரம் தனக்கே உள்ளது என்று இருவரும் கூறி வருகின்றனர். அதுமட்டுமின்றி கட்சியில் தங்களது பலத்தை நிரூபிக்க இருவரும் போட்டி கூட்டத்தையும் நடத்துகிறார்கள்.

பாமக நிறுவனர் ராமதாசுடன் மோதல் போக்கு நிலவி வரும் நிலையில், ராமதாசின் தைலாப்புரம் இல்லத்திற்கு அன்புமணி ராமதாஸ் வருகை தந்துள்ளார். தனது தாய் சரஸ்வதியை பார்ப்பதற்காக அன்புமணி ராமதாஸ் வருகை தந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

Tags:    

மேலும் செய்திகள்