சிவன்மலை சிவலிங்கத்துக்கு அன்னாபிஷேகம், சிறப்பு காய்கறி அலங்காரம் - பக்தர்கள் தரிசனம்
கூடலூர் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த பசுமை நிறைந்த பள்ளத்தாக்குகள் கண்களுக்கு விருந்தாக அமைகிறது.;
கூடலூர்,
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே நம்பாலக்கோட்டை சிவன்மலையில் 360 படிக்கட்டுகள் உள்ளது. இம்மலையின் உச்சியில் சிவலிங்கம் நந்தீஸ்வரர் கொண்ட கிரிவல சிவன் கோவில் உள்ளது. மாதந்தோறும் பௌர்ணமி நாளில் ஏராளமான பக்தர்கள், கிரிவலம் சென்று தரிசித்து வருகின்றனர்.
இம்மலையில் இருந்து பார்க்கும் போது கூடலூர் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த பசுமை நிறைந்த பள்ளத்தாக்குகள் கண்களுக்கு விருந்தாக அமைகிறது. இதனால் சிறந்த சுற்றுலாத்தலமாகவும் காணப்படுகிறது. இன்று (5.11.25) ஐப்பசி மாத பௌர்ணமி தினத்தை ஒட்டி சிவன்மலையில் சிவலிங்கத்துக்கு அன்னாபிஷேகம் மற்றும் பல்வேறு வகையான காய்கறிகளால் சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றது. மாலை 5 மணிக்கு ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்று தரிசித்தனர்.
கிரிவல சிவன் கோவில் கமிட்டி செயலாளர் நடராஜ், தலைவர் கேசவன், கோவில் அர்ச்சகர் பாண்டு குருசாமி உள்பட ஏராளமானவர்கள் மக்கள் நலன் வேண்டி கூட்டுப் பிரார்த்தனை நடத்தினர். இதனால் சிவன்மலை உச்சி சிவாய நமஹ கோஷத்தால் நிரம்பி காணப்பட்டது.