காஞ்சிபுரத்தில் மோட்டார் வாகன ஆய்வாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
திருவள்ளூர் மாவட்டத்தில் மோட்டார் வாகன ஆய்வாளராக பணியாற்றி வருபவர் லோகநாதன்.;
காஞ்சிபுரம்,
திருவள்ளூர் மாவட்ட மோட்டார் வாகன ஆய்வாளர் லோகநாதன் வீட்டில் காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தி கணக்கில் காட்டப்படாத ரூ.84 ஆயிரத்தையும் பறிமுதல் செய்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் மோட்டார் வாகன ஆய்வாளராக பணியாற்றி வருபவர் லோகநாதன்.இவரது வீடு காஞ்சிபுரத்தில் செவிலிமேடு பகுதியில் குமரன் நகர் பகுதியில் உள்ளது.திருவள்ளூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அண்மையில் திடீர் ஆய்வு செய்ததில் கணக்கில் வராத ரூ.1.24 லட்சம் பணத்தை கைப்பற்றியிருந்தனர். இந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி கலைச்செல்வன் உத்தரவின் பேரில் ஆய்வாளர் கீதா தலைமையிலான போலீசார் காஞ்சிபுரம் செவிலிமேடு பகுதியில் குமரன் நகரில் உள்ள அவரது வீட்டில் சோதனை நடத்தினார்கள்.
இச்சோதனையில் வங்கி லாக்கர் சாவி மற்றும் ரூ.84 ஆயிரம் மற்றும் ஆவணங்கள் சிலவற்றையும் பறிமுதல் செய்தனர். 65 சவரன் தங்க நகைகள் ஆய்வு செய்து அவற்றை அவரிடமே ஒப்படைத்துள்ளனர்.