2026 சட்டமன்ற தேர்தலில் மக்கள் விரோத திமுக விரட்டியடிக்கப்படும் - தமிழிசை சவுந்தரராஜன்
தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு தங்கள் கருத்துகளை வெளிப்படுத்த சுதந்திரம் இருக்கிறது என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.;
கோப்புப்படம்
செய்தியாளர்களைச் சந்தித்த பா.ஜ.க. மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது:-
திமுக வெளியேறுவதற்கான சரியான நேரம் வந்துவிட்டது. இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தும் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், 2026-க்கு மேல் பதவியில் நீடிக்கமாட்டார். திமுக வெளியேறும். மக்கள் விரோத திமுக 2026 சட்டமன்றத் தேர்தலில் மக்களால் விரட்டியடிக்கப்படும். பாஜகவுக்கு நோ என்ட்ரி என்று ஸ்டாலின் கூறுகிறார். திமுக வெளியேறிய பிறகு ஆணவக் கொலைகள், குற்றங்கள் மற்றும் மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு நோ என்ட்ரி.
செந்தில் பாலாஜி சிறையில் இருக்க வேண்டும். கறைபடிந்த முன்னாள் அமைச்சரான செந்தில் பாலாஜியை, கட்சி நிகழ்வை ஏற்பாடு செய்ததற்காக ஸ்டாலின் புகழ்ந்து பேசுகிறார். எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, செந்தில் பாலாஜி மீது வழக்குத் தொடர்ந்த முதல்வர், இப்போது அவரை ஆதரிப்பது ஏன் என்பதை மக்களுக்கு விளக்க வேண்டும். எட்டுக்கும் மேற்பட்ட திமுக அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன.
திமுகவின் கூட்டணிக் கட்சிகளுக்கு, திமுக அரசுக்கு எதிராக வெளிப்படையாகக் கருத்து தெரிவிக்க தைரியம் இல்லை. இது திமுக கூட்டணியில் ஜனநாயகம் இல்லை என்பதைக் காட்டுகிறது. தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு ஜனநாயக முறையில் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்த சுதந்திரம் இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.