சட்டமன்ற தேர்தல்; வாக்குப்பதிவு பொருட்களுக்கு டெண்டர் கோரியது தமிழக அரசு
வாக்குப்பதிவின்போது பயன்படுத்தப்படும் பொருட்களை கொள்முதல் செய்வதற்கு தமிழக அரசு டெண்டர் கோரியுள்ளது.;
சென்னை,
தமிழகத்தில் 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு வாக்குப்பதிவின்போது பயன்படுத்தப்படும் பொருட்களை கொள்முதல் செய்வதற்கு தமிழக அரசு டெண்டர் கோரியுள்ளது.
அதன்படி 26.37 லட்சம் டிராயிங் பின்(Drawing pin), 1.05 லட்சம் ரப்பர் ஸ்டாம்ப் பேடு மற்றும் மை குப்பிகள் ஆகியவற்றை கொள்முதல் செய்வதற்கான டெண்டர் விடப்பட்டுள்ளது. மேலும், பென்சில்கள், பேனா, கார்பன் பேப்பர் என மொத்தம் சுமார் ரூ.7 கோடி மதிப்பிலான பொருட்களை கொள்முதல் செய்ய தமிழக அரசு டெண்டர் கோரியுள்ளது.