பெங்களூரு-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயில் ரத்து
ரெயிலில் முன்பதிவு செய்திருந்த பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.;
பெங்களூரு,
வங்கக்கடலில் உருவான ‘மோந்தா’ புயல் ஆந்திராவில் கரையை கடக்கிறது. இதையொட்டி ஆந்திரா, தமிழ்நாடு சென்னையில் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் மோந்தா புயல் காரணமாக எஸ்.எம்.வி.டி. பெங்களூரு-நாகர்கோவில்-எஸ்.எம்.வி.டி. பெங்களூரு (வண்டி எண்: 17235/36) எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நேற்றும், எஸ்.எம்.வி.டி. பெங்களூரு-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயில் (17235) இன்றும் (புதன்கிழமை) ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்த ரெயில், ஆந்திர மாநிலம் கச்சேகுடா செல்லும் ரெயிலுக்கு இணைப்பு ரெயிலாக இயங்குகிறது. ஆந்திராவில் புயல் கரையை கடப்பதால் இந்த பெங்களூரு-நாகர்கோவில் ரெயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் அந்த ரெயிலில் முன்பதிவு செய்திருந்த பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.