பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் டெல்லி பயணம்

நயினார் நாகேந்திரன் டெல்லியில் அமித்ஷாவை சந்தித்து ஆலோசனை நடத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.;

Update:2025-09-11 11:09 IST

புதுடெல்லி,

தமிழகத்தில் நிலவும் பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில், பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று டெல்லிக்கு பயணம் மேற்கொள்கிறார். சமீபத்தில் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட எம்.எல்.ஏ. செங்கோட்டையன், ஹரித்துவார் ஆன்மீக பயணம் செல்வதாக சொல்லிவிட்டு டெல்லியில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்து பேசியிருந்தார்.

முன்னதாக அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்று பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் 10 நாட்கள் கெடு விதித்திருந்தார். இதைத்தொடர்ந்து அவரை கட்சி பொறுப்புகளில் இருந்து எடப்பாடி பழனிசாமி அதிரடியாக நீக்கினார். இந்த சூழலில் அமித்ஷா, செங்கோட்டையன் இடையே நடந்த சந்திப்பு பேசுபொருளாக மாறியது.

இந்நிலையில், நயினார் நாகேந்திரன் இன்று டெல்லி செல்கிறார். துணை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற சி.பி.ராதாகிருஷ்ணனின் பதவியேற்பு விழா நாளை நடைபெற உள்ளது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக டெல்லி செல்லும் நயினார் நாகேந்திரன், அங்கு அமித்ஷாவை சந்தித்து ஆலோசனை நடத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.  

Tags:    

மேலும் செய்திகள்