சென்னை தலைமை செயலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்; போலீசார் சோதனை
வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் இந்த சோதனை நடந்து வருகிறது.;
சென்னை,
சென்னை தலைமை செயலகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டு உள்ளது என மர்ம நபர் மிரட்டல் விடுத்து உள்ளார். இதுபற்றி தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் இந்த சோதனை நடந்து வருகிறது. இதனை தொடர்ந்து, செயலகத்தில் உள்ள அதிகாரிகள், பணியாளர்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டனர்.
அந்த பகுதியை தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த போலீசார் சோதனையை தீவிரப்படுத்தி உள்ளனர்.