சென்னை: ஐ.டி. நிறுவனங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளுக்கு கடந்த சில நாட்களாக தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல்கள் வந்த வண்ணம் உள்ளன.;

Update:2025-10-10 13:19 IST

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளுக்கு கடந்த சில நாட்களாக தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல்கள் வந்த வண்ணம் உள்ளன. கோவில்கள், விமான நிலையங்கள், அரசியல் கட்சி தலைவர்களின் வீடுகள், செய்தி நிறுவனங்கள், சினிமா பிரபலங்களின் வீடுகள், கோர்ட்டுகள் என பல இடங்களுக்கு தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல்கள் வந்த வண்ணம் உள்ளன.

இந்த வெடிகுண்டு மிரட்டல்கள் தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

சென்னையில் பல்வேறு ஐ.டி. நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், சென்னை துரைப்பாக்கம், சோழிங்கநல்லூரில் செயல்பட்டு வரும் ஐ.டி. நிறுவனங்களுக்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

துரைப்பாக்கத்தில் உள்ள 10 மாடி கட்டிடமான சென்னை ஒன் ஐ.டி. வளாகம், சோழிங்கநல்லூரில் உள்ள இன்போசிஸ் ஐ.டி. நிறுவனங்களுக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

இதையடுத்து, விரைந்து சென்ற வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் , போலீசார் ஐ.டி. நிறுவனங்களில் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். இந்த வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து ஐ.டி.நிறுவனங்களுக்கு பணிக்கு வந்த ஊழியர்களை வீட்டிற்கு திரும்பி செல்ல நிறுவனங்கள் அறிவுறுத்தியுள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்