திருப்பூர் அருகே அடுத்தடுத்து மோதிக்கொண்ட பஸ்கள்.. விபத்தில் சிக்கி பலர் படுகாயம்

விபத்துள்ளான பஸ் பள்ளத்தில் கவிழ்ந்ததில் அதில் பயணம் செய்த 20 பேர் படுகாயம் அடைந்தனர்.;

Update:2026-01-11 15:05 IST

அவினாசி,

திருப்பூர், பல்லகவுண்டம்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் ஈரோடு நோக்கி சென்ற 3 பஸ்கள் அடுத்தடுத்து மோதி விபத்து ஏற்பட்டது.

முன்னால் சென்ற வாகனம் திடீரென பிரேக் போட்டதால் விபத்து ஏற்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் விபத்துக்குள்ளான பஸ், சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்ததில் அதில் பயணம் செய்த 20 பேர் படுகாயம் அடைந்தனர்.

இதனால் அந்த பகுதியில் சில மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்