16 நாட்களுக்கு பிறகு வெளியே வந்த புஸ்ஸி ஆனந்த்... முதல் சந்திப்பே விஜய்யுடன் தான்

விஜய்யும், புஸ்ஸி ஆனந்தும் தீவிரமாக ஆலோசனை மேற்கொண்டனர்.;

Update:2025-10-14 11:26 IST

சென்னை ,

கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த மாதம் 27-ந் தேதி நடைபெற்ற தமிழக வெற்றிக்கழக பிரசார கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், துணை பொதுச்செயலாளர் நிர்மல் குமார், கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் உள்பட சிலர் மீது போலீசார் வழக்குபதிவு செய்தனர்.

கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன், கரூர் மத்திய மாநகர நிர்வாகி பவுன் ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்ட நிலையில், தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் இணை பொதுச் செயலாளர் சி. டி. ஆர். நிர்மல் குமார் ஆகியோர் தலைமறைவாகினர். இவர்களை கைது கைது செய்ய 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

Advertising
Advertising

இந்த நிலையில் கரூர் கூட்ட நெரிசல் வழக்கை சிபிஐ விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு நேற்று உத்தரவிட்டது இதனை தொடர்நது தலைமறைவாக இருந்த புஸ்சி ஆனந்த் , நிர்மல்குமார் நேற்று வெளியே வந்தனர் . வெளியே வந்த உடன் முதலில் நிர்மகுமார் விஜய்யை சந்தித்தார் . தொடர்ந்து புஸ்ஸி ஆனந்த் விஜய்யை சந்தித்தார் . புஸ்ஸி ஆனந்த் விஜய்யுடன் சுமார் 20 நிமிடங்கள் ஆலோசனை நடத்தினர் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு மற்றும் கட்சியின் அடுத்தக் கட்ட நடவடிக்கைகள் குறித்து விஜய்யும், புஸ்ஸி ஆனந்தும் தீவிரமாக ஆலோசனை மேற்கொண்டனர் இந்த சந்திப்பை முடித்து கொண்டு புஸ்ஸி ஆனந்த் கிழக்கு கடற்கரை சாலை வழியாக புதுச்சேரிக்கு புறப்பட்டு சென்றார். 


Full View


Tags:    

மேலும் செய்திகள்