ஒரே தண்டவாளத்தில் ரெயில்கள் அருகருகே நிற்கலாமா? - தெற்கு ரெயில்வே விளக்கம்

சிக்னல் விதிகள் மற்றும் பாதுகாப்பு தூரம் ஆகியவற்றை பின்பற்றி அனைத்து ரெயில்களும் இயக்கப்படுகின்றன என்று தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.;

Update:2025-11-20 20:48 IST

கோப்புப்படம் 

சென்னை சேத்துப்பட்டு ரெயில் நிலையத்தில் அருகருகே மின்சார ரெயில்கள் நின்றதாக செய்திகள் வெளியானது. இதுதொடர்பாக தெற்கு ரெயில்வே சென்னை கோட்டம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது:-

சென்னை கடற்கரை-தாம்பரம்-செங்கல்பட்டு வழித்தடத்தில் தானியங்கி சிக்னல் முறை நிர்வகிக்கப்படுகிறது. ரெயில்வே விதிகளில் குறிப்பிட்டபடி, ஒரு ரெயிலை மற்றொரு ரெயில் பின்தொடரவும், பாதுகாப்பான இடைவெளியில் நிறுத்தவும் அனுமதிக்கப்பட்டு உள்ளது. பரிந்துரைக்கப்பட்ட சிக்னல் விதிகள் மற்றும் பாதுகாப்பு தூரம் ஆகியவற்றை கண்டிப்பாக பின்பற்றி அனைத்து ரெயில்களும் இயக்கப்படுகின்றன.

Advertising
Advertising

கூட்ட நெரிசல் மிகுந்த காலை நேரத்தில் விரைவு ரெயில், மின்சார ரெயில்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் மறுசீரமைப்பு பணி நடந்து வருகிறது. இதன் காரணமாக வேக கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதால் ரெயில்கள் தாமதமாகின்றன.

நிலையான மற்றும் பாதுகாப்பு இயக்க நடைமுறையின் ஒரு பகுதியாக 2 ரெயில்கள் சேத்துப்பட்டு ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டன. வழக்கமான போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் வகையில் ஒரு பகுதியாக மின்சார ரெயில்கள் சில நிமிடம் நிறுத்தி வைக்கப்பட்டது. சென்னை கோட்ட ஊழியர்கள் மின்சார ரெயில் சேவையை சுமுகமாகவும், பாதுகாப்பாகவும் இயக்குவதை உறுதி செய்கின்றனர். இந்த ஆண்டு மின்சார ரெயில்கள் 95 சதவீதம் சரியான நேரத்தில் இயக்கப்பட்டது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்