கோவை கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவம் - கைதான 3 பேருக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு

கல்லூரி மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 3 பேரையும் அதிரடியாக சுட்டுப் பிடித்தனர்.;

Update:2025-11-20 18:23 IST

கோவை,

கோவை விமான நிலையம் அருகே பிருந்தாவன் நகர் பகுதியில் கடந்த 2-ந்தேதி இரவு 10 மணியளவில் 21 வயது கல்லூரி மாணவியும், அவரது ஆண் நண்பரும் காரில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த 3 பேர் கொண்ட கும்பல், காரின் கண்ணாடியை உடைத்து கல்லூரி மாணவியின் ஆண் நண்பரை கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் அவர் படுகாயமடைந்து மயங்கி விழுந்தார்.

பின்னர், அந்த 3 பேரும் கல்லூரி மாணவியை மறைவான இடத்திற்கு தூக்கிச்சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். தாக்குதலில் மயக்கமடைந்த ஆண் நண்பர் மயக்கம் தெளிந்து எழுந்ததும் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், முற்புதர் அருகில் அரைகுறை ஆடையுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்த கல்லூரி மாணவியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Advertising
Advertising

மேலும் மாணவியின் ஆண் நண்பரும் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த கொடூர சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த தனிப்படை போலீசார், கல்லூரி மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 3 பேரையும் அதிரடியாக சுட்டுப் பிடித்தனர்.

பின்னர் மூவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில், கைதான 3 பேருக்கும் விதிக்கப்பட்ட 14 நாட்கள் நீதிமன்ற காவல் நேற்றோடு முடிவடைந்த நிலையில், அவர்கள் மூவருக்கும் வரும் டிசம்பர் 3-ந்தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து கோவை மாவட்ட நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Full View
Tags:    

மேலும் செய்திகள்