விழுப்புரத்தில் ஏரிக்குள் கார் பாய்ந்து விபத்து - அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய இருவர்
பிரேக் பிடித்தபோது கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த ஏரிக்குள் பாய்ந்தது.;
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியைச் சேர்ந்தவர் ஊராட்சி மன்ற தலைவர் மணிமாறன்(வயது 45). இவர் செஞ்சியில் இருந்து திருவண்ணாமலை நோக்கி தனது நண்பருடன் காரில் சென்று கொண்டிருந்தார். அந்த கார் செம்மேடு அருகே வந்தபோது திடீரென ஒரு இருசக்கர வாகனம் குறுக்கே வந்துள்ளது. அந்த வாகனத்தில் மோதாமல் தவிர்ப்பதற்காக பிரேக் பிடித்தபோது கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த ஏரிக்குள் பாய்ந்தது.
கார் பாதியளவு நீரில் மூழ்கிய நிலையில், காருக்குள் இருந்த இருவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், ஏரிக்குள் மூழ்கிய காரை கிரேன் உதவியுடன் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். தொடர்ந்து இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.