சாதிப் பெருமைதான் ஆணவக் கொலைகளுக்கு காரணம் - திருமாவளவன் பேட்டி

நெல்லையில் இளைஞர் கவின் ஆணவப் படுகொலை அதிர்ச்சி தருவதாக திருமாவளவன் கூறினார்.;

Update:2025-07-31 11:49 IST

சென்னை,

சென்னை விமான நிலையத்தில் விசிக தலைவரும், எம்.பி.யுமான திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது;

நெல்லையில் இளைஞர் கவின் ஆணவப் படுகொலை அதிர்ச்சி தருகிறது. சுர்ஜித், அவரது தாய், தந்தை ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எப்.ஐ.ஆர்-ல் குறிப்பிடப்பட்டுள்ள நபர்களை கைது செய்வதில் காவல்துறைக்கு தயக்கம் ஏன்..? சிபிசிஐடி போலீசார் நேர்மையுடன் வழக்கை விசாரிக்க வேண்டும்.

வட இந்திய மாநிலங்களில் நடக்கும் சாதிய படுகொலைகள் தென்னிந்திய மாநிலங்களிலும் அதிகரித்துள்ளது. சாதிப் பெருமைதான் ஆணவக் கொலைகளுக்கு காரணம். ஆணவக் கொலைகளை தடுக்க மத்திய அரசு தேசிய அளவில் சட்டம் இயற்ற வேண்டும்."

இவ்வாறு அவர் கூறினார்.  

Tags:    

மேலும் செய்திகள்