சாதி, மதம் இல்லை என சான்றிதழ்: அரசாணை பிறப்பிக்க அரசுக்கு ஐகோர்ட்டு பரிந்துரை

கல்வி, வேலை வாய்ப்பில், சாதி மதம் இன்னுமும் முக்கியத்துவம் பெற்றுள்ளதாக நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.;

Update:2025-06-11 17:40 IST

சென்னை,

சாதி, மதமில்லை என சான்று வழங்க மறுத்ததை எதிர்த்து திருப்பத்தூரைச் சேர்ந்த சந்தோஷ் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதுதொடர்பான வழக்கு விசாரணை இன்று நடைபெற்றது. 

இந்நிலையில் சாதி, மதம் இல்லை என சான்றிதழ்கள் வழங்கும் வகையில் உரிய அரசாணையை பிறப்பிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு பரிந்துரை செய்துள்ளது.

மேலும் அரசியல் சாசனம் சாதிய பாகுபாடுகளை தடை செய்த போதிலும், சமூக வாழ்க்கையில், அரசியலில், கல்வியில், வேலை வாய்ப்பில், சாதி மதம் இன்னுமும் முக்கியத்துவம் பெற்றுள்ளது என்று நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.

இதனைத்தொடர்ந்து சாதி, மதம் இல்லை என சான்றிதழ் வழங்கக்கோரி வழக்கு தொடர்ந்த மனுதாரருக்கு சென்னை ஐகோர்ட்டு பாராட்டு தெரிவித்தது.

Tags:    

மேலும் செய்திகள்