கோவை: சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட கேரள இளைஞர்கள் கைது
பெண் செல்போனில் பேசியபடி சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தார்.;
கோவை மாவட்டம் பொள்ளாச்சி கோவிந்தபுரத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் நேற்று முன் தினம் பெண் செல்போனில் பேசியபடி சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தார்.
அப்போது, அவ்வழியே பைக்கில் வந்த இருவர் அந்த பெண்ணின் நகையை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர். பறிக்கப்பட்டது கவரிங் நகை என்றபோதும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில், பெண்ணிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட கேரளாவை சேர்ந்த இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் இருந்து கவரிங் நகையை பறித்து சென்ற கேரளாவை சேர்ந்த கோகுல் தாஸ் (வயது 26), அமல் (வயது 25) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.