சென்னை: கொளத்தூரில் உள்ள வணிக வளாகத்தில் தீ விபத்து - 6 பேர் காயம்

சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update:2025-07-13 17:27 IST

சென்னை,

சென்னை கொளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.பி கோவில் தெருவில் வணிக வளாகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த 2 மாடி கட்டிடத்தில் உடற்பயிற்சி கூடம், விளையாட்டு மையம், காபி ஷாப் உள்ளன. இன்று விடுமுறை என்பதால் பலரும் அங்குள்ள வணிக வளாகத்திற்கு வந்திருந்தனர்.

இந்த நிலையில் வணிக வளாகத்தில் திடீரென தீ ஏற்பட்டது. இந்த தீயானது மளமளவென பரவத்தொடங்கியது. இதில் 6 பேர் காயமடைந்தனர். இதனிடையே அங்கிருந்தவர்கள் தீயணைப்புத்துறையினருக்கு உடனடியாக தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்த தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்கு எரிந்துகொண்டிருந்த தீயை கட்டுக்குள் கொண்டுவரும் பணியில் தீயணைப்புத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இதில் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்