சென்னை ஆர்பிஐ சுரங்கப்பாதை ஒருவழிப்பாதையாக மாற்றம்
கடற்கரை சாலையில் இருந்து பாரிமுனை செல்வோருக்கு எந்தவித மாற்றம் இல்லை.;
சென்னை,
சாலை பணிகள் காரணமாக சென்னை ஆர்பிஐ சுரங்கப்பாதை வருகிற 29ம் தேதி முதல் ஒரு வழிபாதை மாற்றப்பட உள்ளதாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. கடற்கரை சாலையில் இருந்து பாரிமுனை செல்வோருக்கு எந்தவித மாற்றம் இல்லை.
மறுமுனையில் வருவோர் சுரங்கப்பாதை அணுகு சாலை - வடக்கு கோட்டை சாலை - முத்துசாமி சாலை - போர் நினைவுச் சின்னம் வழியாக செல்ல வேண்டும் என சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.