சென்னை: தொழில்நுட்பக் கோளாறு சரிசெய்யப்பட்டது - மெட்ரோ ரெயில் நிர்வாகம்

சென்னை சென்ட்ரல் மற்றும் விமான நிலையம்(கோயம்பேடு வழி) இடையேயான நேரடி மெட்ரோ ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.;

Update:2025-06-11 20:32 IST

சென்னை,

தொழில்நுட்ப கோளாறு காரணமாக, சென்னை விமான நிலையத்துக்கான மெட்ரோ ரெயில் சேவை இன்று தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இருப்பினும், விம்கோ நகர் டிப்போவிற்கும் மீனம்பாக்கத்திற்கும் இடையிலான சேவைகள் வழக்கம் போல் இயங்கியது.

இந்த நிலையில், தற்போது தொழில்நுட்பக் கோளாறு சரிசெய்யப்பட்டு ரெயில் சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மெட்ரோ ரெயில் நிர்வாகத்தின் 'எக்ஸ்' தள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது;-

"தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்டுள்ளது. விம்கோ நகர் டிப்போ மற்றும் விமான நிலையம் இடையேயான நீல வழித்தடத்தில் மெட்ரோ ரெயில் சேவைகள் மீண்டும் வழக்கம் போல் தொடங்கியுள்ளன. பச்சை வழித்தடத்தில் சென்ட்ரல் முதல் செயிண்ட் தாமஸ் மவுண்ட் வரையிலான ரெயில் சேவை வழக்கம் போல் இயங்குகிறது.

பச்சை வழித்தடத்தில் சென்னை சென்ட்ரல் மற்றும் விமான நிலையம்(கோயம்பேடு வழி) இடையேயான நேரடி மெட்ரோ ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. எனவே, பயணிகள் விமான நிலையத்தை அடைய ஆலந்தூர் நிலையத்தில் வழித்தட பரிமாற்றம் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறோம்."

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்