ரூ.4 கோடிக்கு பதிலாக ரூ.400 மதிப்புள்ள கைக்கடிகாரம்; சென்னையில் ஜவுளிக்கடை அதிபர் மகளிடம் மோசடி

கைக்கெடிகாரத்தை வாங்கி தருவதாக அடையாறு போட் கிளப் சாலையில் வசிக்கும் தொழிலதிபர் ஒருவர் ஏஜெண்டாக செயல்பட்டார்.;

Update:2025-10-22 08:22 IST

சென்னை,

சென்னை அபிராமபுரம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பிரபல ஜவுளிக்கடை அதிபரின் மகள் வசிக்கிறார். அவர் ரூ.4 கோடி மதிப்புள்ள கைக்கெடிகாரத்தை வெளிநாட்டில் இருந்து வாங்குவதற்காக பதிவு செய்திருந்தார். ஆன்லைன் மூலம் இந்த விலை உயர்ந்த கைக்கெடிகாரத்தை வாங்குவதற்கு ஏற்பாடு செய்தார்.இதற்கு முன்பணமாக ரூ.2.30 கோடி அனுப்பி இருந்தார். நேற்று முன்தினம் ஆன்லைன் மூலமாக குறிப்பிட்ட கைக்கெடிகாரம் ஜவுளிக்கடை அதிபர் மகளிடம் கொடுக்கப்பட்டது.

பார்சலை பிரித்து பார்த்த அவருக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. பார்சலில் ரூ.4 கோடி மதிப்புள்ள கைக்கெடிகாரத்துக்கு பதிலாக ரூ.400 மதிப்புள்ள சாதாரண கைக்கெடிகாரம் இருந்துள்ளது. இதையடுத்து, கைக்கெடிகாரத்தை வாங்கி தருவதாக அடையாறு போட் கிளப் சாலையில் வசிக்கும் தொழிலதிபர் ஒருவர் ஏஜெண்டாக செயல்பட்டார்.

அவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், முன்பணமாக கொடுத்த ரூ.2.30 கோடியை வாங்கித் தரவேண்டும் என்றும் கோரிக்கை வைத்து சென்னை அபிராமபுரம் போலீஸ் நிலையத்தில் பரபரப்பு புகார் மனு நேற்று முன்தினம் இரவு கொடுக்கப்பட்டது. இந்த புகார் மனு மீது கோட்டூர்புரம் உதவி கமிஷனர் நேரடியாக விசாரித்து வருகிறார். புகார் மனு விசாரணைக்காக மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு அனுப்பி வைக்கப்படும் என்று போலீஸ் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்