பிளஸ்-2 மாணவிக்கு பாலியல் தொல்லை; அரசு பள்ளி ஆசிரியர் கைது
போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஆசிரியரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.;
தஞ்சை,
தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள உமையாள்புரம் பகுதியை சேர்ந்தவர் முருகன்(வயது 35). இவர், பாபநாசம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் ஆவார். இவர் கபிஸ்தலத்தில் டியூசன் சென்டர் நடத்தி வருகிறார். கடந்த 6-ந் தேதி தன்னிடம் டியூசன் படிக்கும் பிளஸ்-2 மாணவியிடம் ஆபாசமாக பேசி தனது மோட்டார் சைக்கிளில் ஏறுமாறு கையை பிடித்து இழுத்து பாலியல் தொல்லை கொடுத்து மிரட்டி உள்ளார்.
இதையடுத்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் பாபநாசம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் உஷா, ஆசிரியர் முருகனிடம் விசாரணை நடத்தினர். இதில், மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஆசிரியர் முருகனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.