ஆங்கிலத்துறையில் முனைவர் பட்டம்: திருநங்கை ஜென்சிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
மூன்றாம் பாலினத்தவரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக தமிழக அரசு பல நலத்திட்டங்களை செய்து வருகிறது.;
சென்னை,
சென்னையில் உள்ள பிரபல தனியார் கல்லூரி ஆங்கிலத் துறையில் முனைவர் பட்டம் பெற்ற முதல் திருநங்கை டாக்டர் ஜென்சி, அக்கல்லூரியில் ஆங்கில உதவி பேராசிரியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.மூன்றாம் பாலினத்தவரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு திமுக அரசு பல நலத்திட்டங்களை செய்து வரும் நிலையில், அதற்கு மேலும் வலுசேர்க்கும் விதமாக இது அமைந்துள்ளது.
திருநங்கை என்றாலே ஒரு விதமான பிற்போக்கு சிந்தனை நிலவும் இச்சமூகத்தில் படிப்பிற்கு எந்த பாலினமும் தடையில்லை என்ற நம்பிக்கை இதன் மூலம் அனைவரிடத்திலும் ஏற்பட்டிருக்கிறது என நெகிழ்ச்சியோடு கூறுகிறார் உதவி பேராசிரியை டாக்டர் ஜென்சி.
இந்தநிலையில், தனியார் கல்லூரியில் ஆங்கிலத்துறையில் முனைவர் பட்டம் பெற்ற முதல் திருநங்கை ஜென்சிக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் எக்ஸ் தள பதிவில், வாழ்த்துகள் டாக்டர் ஜென்சி, உங்களது உழைப்பின் ஒளியால் இன்னும் பலநூறு பேர் கல்விக்கரை சேரட்டும். தடைகளையும் புறக்கணிப்புகளையும் கல்வி எனும் பேராற்றலால் வெல்லட்டும் என பதிவிட்டுள்ளார்.