முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசனின் தந்தை காலமானார்
சபரீசனின் தந்தை வேதமூர்த்தி (81) உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார்.;
சென்னை,
தி.மு.க தலைவரும், தமிழ்நாடு முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் மகள் செந்தாமரையின் கணவர் சபரீசன். சென்னை நீலாங்கரை இல்லத்தில் சபரீசன் மற்றும் செந்தாமரை தம்பதியினர் வசித்து வருகின்றனர்.
இதற்கிடையே, மு.க.ஸ்டாலினின் சம்பந்தியும், சபரீசனின் தந்தையுமான வேதமூர்த்தி உடல்நலக்குறைவு காரணமாக ஓஎம்ஆரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நள்ளிரவில் அவர் காலமானார். வேதமூர்த்தி உடல் அஞ்சலிக்காக கொட்டிவாக்கம் ஏஜிஎஸ் காலனியில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. இறுதி சடங்கு நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது.
நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள அரியநாயகபுரம் வேதமூர்த்தியின் சொந்த ஊர் ஆகும். அவர் வங்கி அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார்.