சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முதல்-அமைச்சருக்கு மனமில்லை - அன்புமணி ராமதாஸ் பேச்சு

தமிழகத்தில் 69 சதவீத இட ஒதுக்கீட்டை பாதுகாக்க சாதிவாரி கணக்கெடுப்பு அவசியம் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.;

Update:2025-05-11 21:45 IST

மாமல்லபுரம்,

வன்னியர் சங்கம் சார்பில் மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தை பகுதியில், சித்திரை முழு நிலவு வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு நடைபெற்று வருகிறது. 12 ஆண்டுகளுக்கு பின்னர் நடைபெறும் இந்த மாநாட்டில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றுள்ளனர்.

இந்த மாநாட்டில் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த 26 பேருக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து, மாநாட்டு திடலில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டிருந்த வன்னியர் சங்க கொடியை பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் ஏற்றி வைத்தார். இந்த நிலையில் மாநாட்டில் பேசிய பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியதாவது:-

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அதிகாரம் இருந்தும் முதல்-அமைச்சர் ஸ்டாலினுக்கு மனமில்லை. தமிழகத்தில் 69 சதவீத இட ஒதுக்கீட்டை பாதுகாக்க சாதிவாரி கணக்கெடுப்பு அவசியம். பலமுறை ஆட்சிக்கு வருவதற்கு உதவிய வன்னியர் சமுதாயத்திற்கு தி.மு.க. துரோகம் செய்கிறது.

கருணாநிதி இருந்திருந்தால் நிச்சயம் சமூகநீதி அடிப்படையில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி இருப்பார். நல்ல கல்வியை கொடுத்தால் இளைஞர்கள் நல்ல வேலைக்கு போவார்கள். மதுவுக்கு ஏன் அடிமையாகப் போகிறார்கள்? கிராமங்களை நோக்கி நான் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளேன். இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்