கோவை: மூதாட்டிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கட்டிட தொழிலாளி கைது

மூதாட்டிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவரை போலீசார் கைதுசெய்தனர்.;

Update:2025-04-06 12:25 IST

கோவை,

கோவை அருகே உள்ள கிராமத்தில் 85 வயது மூதாட்டி தனியாக வசித்து வருகிறார். அவருக்கு, கட்டிட தொழிலாளியான நாச்சிமுத்து (வயது55) என்பவர் பாலியல் தொல்லை கொடுத்து உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மூதாட்டி கூச்சல் போட்டார். உடனே அங்கிருந்தவர்கள் விரைந்து வந்தனர்.

இதை பார்த்த நாச்சிமுத்து தப்பி ஓடி விட்டார். இது குறித்த புகாரின் பேரில் சூலூர் மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நாச்சிமுத்துவை மடக்கி பிடித்து கைது செய்தனர்.

 

Tags:    

மேலும் செய்திகள்