கோவை: கல்லூரி மாணவர்கள் தங்கியுள்ள விடுதிகளில் போலீசார் சோதனை; போதைப்பொருட்கள் பறிமுதல்

50க்கும் மேற்பட்ட மாணவர்களை பிடித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update:2025-08-24 15:02 IST

கோவையில் கல்லூரி மாணவர்கள் இடையே போதைப்பொருள் புழக்கம் அதிகரித்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

தகவலின் அடிப்படையில் கோவையின் கோவில்பாளையம், செட்டிபாளையம், மதுக்கரை ஆகிய இடங்களில் கல்லூரி மாணவர்கள் தங்கியுள்ள விடுதிகள், அறைகளில் போலீசார் இன்று அதிரடி சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்கள், பயங்கர ஆயுதங்கள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக 50க்கும் மேற்பட்ட மாணவர்களை பிடித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்