கோவை: தண்ணீர் குடிக்க சென்ற ‘ரோலக்ஸ்’ காட்டு யானை உயிரிழப்பு

ஆற்றில் தண்ணீர் குடிக்க சென்ற போது திடீரென வழுக்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தது.;

Update:2025-11-27 01:36 IST

கோவை,

கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் காட்டு யானை ஒன்று விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்தது. இந்த யானையை அந்த பகுதி பொதுமக்கள் ரோலக்ஸ் என்று அழைத்து வந்தனர். இந்த காட்டு யானையை பிடித்து வேறு பகுதியில் விட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

இதனை தொடர்ந்து வனத்துறையினர் அந்த பகுதியில் முகாமிட்டு ரோலக்ஸ் யானையை கடந்த அக்டோபர் மாதம் 17-ந் தேதி பிடித்தனர். பிடிக்கப்பட்ட ரோலக்ஸ் யானை கோவை மாவட்டம் ஆனைமலை வரகழியாறு யானைகள் முகாமிற்கு கொண்டு சென்றனர். அங்கு ரோலக்ஸ் யானைக்கு ரேடியோ காலர் கருவி பொருத்தப்பட்டது. அதன்பின்னர் அந்த யானை அங்குள்ள மந்திரிமட்டத்தில் உள்ள வனப்பகுதியில் விடப்பட்டது. தொடர்ந்து அந்த யானையை வனத்துறையினர் கண்காணித்து வந்தனர்.

இந்த நிலையில் அங்குள்ள ஆற்றில் தண்ணீர் குடிக்க சென்ற போது அந்த காட்டு யானை திடீரென வழுக்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தது. இதற்கிடையே இந்த யானை மரணம் தொடர்பாக, ஒரு உண்மை கண்டறியும் குழுவை அமைக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனைக்கு பின் யானை இறப்புக்கான காரணம் தெரியவரும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.

 

Tags:    

மேலும் செய்திகள்