நெல்லை: வீடு புகுந்து மூதாட்டியிடம் 5 பவுன் நகை பறிப்பு

மூதாட்டியிடம் நகை பறித்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.;

Update:2025-11-27 01:39 IST

நெல்லை,

கூடங்குளம் அருகே ஆவுடையாள்புரத்தை சேர்ந்தவர் முத்துப்பாண்டி. இவரது மனைவி மூக்கம்மாள் (வயது 70). இந்த தம்பதிக்கு 3 ஆண் மற்றும் 2 பெண்கள் உள்ளனர்.

அவர்கள் அனைவருக்கும் திருமணமாகி அவரவர் குடும்பத்தினருடன் வசித்து வருகின்றனர். இதனால் முத்துப்பாண்டியும், மூக்கம்மாளும் வீட்டில் தங்கியுள்ளனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் இருவரும் காற்றுக்காக கதவை பூட்டாமல் லேசாக அடைத்துவிட்டு வீட்டுக்குள் தூங்கிக்கொண்டிருந்தனர். அப்போது அதிகாலை 2 மணியளவில் மர்ம நபர்கள் சிலர் மூக்கம்மாளின் வீட்டுக்கு வந்தனர். அவர்கள் அந்த வீட்டின் மின் இணைப்பை துண்டித்துவிட்டு வீட்டுக்குள் சென்றனர்.

அப்போது அங்கு தூங்கிக்கொண்டிருந்த மூக்கம்மாள் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் நகையை பறித்தனர். இதனால் திடுக்கிட்டு எழுந்த மூக்கம்மாள் கூச்சலிட்டார். ஆனால் அதற்குள் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர். இதுகுறித்து தகவலறிந்ததும் கூடங்குளம் சப்-இன்ஸ்பெக்டர்கள் நெஜில்சன் மற்றும் கிருபா ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

 

Tags:    

மேலும் செய்திகள்