கோவை: காட்டு யானை தாக்கி கால்நடை டாக்டர் படுகாயம்

மயக்க ஊசி செலுத்தி யானையை பிடிக்க முயன்றபோது டிரோன் கேமரா சத்தத்தால் யானை மிரண்டு ஓடியது.;

Update:2025-09-21 09:57 IST

கோவை,

கோவை மாவட்டம், நரசீபுரம் சுற்று வட்டாரப் பகுதிகளில் ‘ரோலக்ஸ்' எனப்படும் ஒற்றை காட்டு யானை ஊருக்குள் புகுந்து விவசாய நிலங்களை சேதப்படுத்தி வந்தது. இதையடுத்து வனத்துறையினர் இரவு பகலாக யானையை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

இந்நிலையில் நேற்று அதிகாலை ஒரு மணியளவில் தொண்டாமுத்தூர் தேவராயபுரத்தை அடுத்த பரமேஸ்வரன்பாளையத்தில் உள்ள வாழை தோட்டத்தில் இருந்து வெளியே வந்த யானைக்கு டாக்டர் விஜயராகவன் மயக்க ஊசி செலுத்த முயன்றதாக தெரிகிறது. இதை பார்த்த யானை திடீரென விஜயராகவனை நோக்கி வந்து தும்பிக்கையால் அவரை கீழே தள்ளி விட்டது.

இதில், அவருக்கு விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. யானையை கண்காணிப்பதற்காக பறக்கவிடப்பட்ட டிரோன் கேமரா சத்தத்தினால் யானை மிரண்டு, அங்கும், இங்கும் ஓடியதாகவும், அதனால் விஜயராகவனை யானை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதனால் அந்த யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்