கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...?

வீட்டுக்கு சென்ற காயத்ரி திடீரென அறையை பூட்டி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.;

Update:2025-08-26 08:44 IST

திருத்தணி,

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஜோதிநகர் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில் ராஜன். இவருடைய மகள் காயத்ரி (வயது 19). திருத்தணி அரசு கலை கல்லூரியில் பி.எஸ்.சி. கம்யூட்டர் சயின்ஸ் 2-ஆம் ஆண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம் ஜோதி நகரில் நடைபெற்ற திருவிழாவில் காயத்ரி தனது தோழிகளுடன் நடனமாடி மகிழ்ந்துள்ளார்.

இந்த நிலையில் வீட்டுக்கு சென்ற காயத்ரி திடீரென அறையை பூட்டி தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். காயத்ரி தூக்கில் தொங்கிக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் கூச்சலிட்டனர். உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் காயத்ரியை மீட்டு திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் காயத்ரி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து திருத்தணி போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவி தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஜோதிநகரில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்