அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பஸ்களை சிறைபிடிக்க குழு அமைப்பு

அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பஸ்களை சிறைபிடிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது.;

Update:2025-09-05 10:21 IST

சென்னை,

பொதுவாக பயணிகளின் முதல் பயணத் தேர்வாக இருப்பது ரெயில் பயணம் தான். ஆனால் அதற்கு 2 மாதங்களுக்கு முன்பே டிக்கெட் புக் செய்யாவிட்டால் இடம் கிடைக்காது என்பதால் இறுதி கட்டத்தில் பயணம் செய்பவர்கள் அரசு பஸ்களை நாடுகின்றனர். அதிலும் இடம் கிடைக்காதவர்கள் கடைசி பயணமாக தனியார் ஆம்னி பஸ்களை பயன்படுத்துகின்றனர்.

தற்போது மிலாடி நபி மற்றும் வார விடுமுறையை முன்னிட்டு பலர் தங்களது குடும்பத்துடன் சொந்த ஊர்களுக்கு செல்லத் தொடங்கியுள்ளனர். ரெயில் மற்றும் அரசு பஸ்களில் டிக்கெட் கிடைக்காதவர்கள், ஆம்னி பஸ்களை தேர்ந்து எடுத்து வருகிறார்கள். இதனை பயன்படுத்தி ஆம்னி பஸ்களில் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தனியார் ஆம்னி பஸ்கள் அதிக கட்டணம் வசூல் செய்வதாக புகார் எழுந்தது. இதனை தடுக்க தமிழ்நாடு முழுவதும் வட்டார போக்குவரத்து அலுவலர்கள், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மற்றும் போக்குவரத்து சோதனைச்சாவடி ஆய்வாளர்களை கொண்டு சிறப்புக்குழு அமைக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து போக்குவரத்து மற்றும் சாலைப்பாதுகாப்பு ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

தொடர் விடுமுறையை பயன்படுத்தி தனியார் ஆம்னி பஸ்கள் அதிகப்படியான கட்டணம் வசூல் செய்தால் அதனைத் தடுக்க தமிழ்நாடு முழுவதும் வட்டாரப்போக்குவரத்து அலுவலர்கள், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மற்றும் போக்குவரத்து சோதனைச்சாவடி ஆய்வாளர்களை கொண்டு சிறப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

அதிக கட்டணம் வசூல் செய்யும் மற்றும் அனுமதியின்றி இயங்கும் ஆம்னி பஸ்களை தீவிரமாக சோதனை செய்து அபராதம் விதித்தும், வாகனங்களை சிறைபிடித்தும் வரி வசூல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்