கொரோனா பரவல்; கர்ப்பிணிகள் முகக்கவசம் அணிய தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

கூட்ட நெரிசல் அதிகமுள்ள இடங்களுக்கு செல்வதை கர்ப்பிணிகள் தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.;

Update:2025-06-06 15:27 IST

சென்னை,

இந்தியாவில் தற்போது மீண்டும் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. நாடு முழுவதும் தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,364 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக 4 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் கேரளாவில் 2 பேரும், பஞ்சாப் மற்றும் கர்நாடகாவில் தலா ஒருவரும் கொரோனா பாதிப்பால் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கொரோனா பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கர்ப்பிணிகள் முகக்கவசம் அணிய வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. கூட்ட நெரிசல் அதிகமுள்ள இடங்களுக்கு செல்வதை கர்ப்பிணிகள் தவிர்க்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என்றாலும், பாதுகாப்பு கருதி பொது இடங்களில் முகக்கவசம் அணிந்து கொள்வது நல்லது என்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.  

Tags:    

மேலும் செய்திகள்