காதல் விவகாரம் வீட்டுக்கு தெரிந்ததால் விஷம் குடித்த ஜோடி - கல்லூரி மாணவி உயிரிழப்பு

கல்லூரி மாணவி உயிரிழந்த நிலையில், அவரது காதலனுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.;

Update:2025-10-25 11:25 IST

கோப்புப்படம் 

தர்மபுரி மாவட்டம் சோகத்தூர் அருகே பென்னாகரம் சாலையில் மேட்டுத்தெரு ஓட்டுனர் நகரை சேர்ந்த கணேசன் மகள் சந்தியா (17 வயது). தர்மபுரி தனியார் கல்லுாரியில் பி.காம். முதலம் ஆண்டு படித்து வந்தார். இவரும் அதே கல்லுாரியில் படிக்கும் சக மாணவரும் காதலித்து வந்தனர்.

இவர்களது காதல் விவகாரம் இரு வீட்டார் குடும்பத்துக்கும் தெரிந்ததால் சேர்ந்து வாழ விடமாட்டார்கள் என நினைத்து பஞ்சப்பள்ளி அணைக்கு மேலே உள்ள முனியப்பன் கோவில் அருகே இருவரும் விஷம் குடித்தனர். பின்னர் அவர்களே ஆம்புலன்சுக்கு போன் செய்தனர்.

விரைந்து வந்த ஆம்புலன்சு டிரைவர், மருத்துவ உதவியாளர் இருவரையும் தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சந்தியா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். காதலனுக்கு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக கெலமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்