தகராறில் பிரிந்த தம்பதி.. திருமண நாளன்று கணவன் எடுத்த விபரீத முடிவு

தனது மனைவிக்கு போன் செய்து திருமண நாள் கோவிலுக்கு செல்ல வேண்டும் வா என்று அவர் அழைத்ததாக கூறப்படுகிறது.;

Update:2025-09-04 02:43 IST


சிவகாசி அருகே உள்ள விஸ்வநத்தம் முருகையாபுரத்தை சேர்ந்தவர் கருப்பையா மகன் கணேசன் (வயது 35). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சந்தியா (23) என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கணவன்- மனைவி இருவருக்கும் குடும்பத்தகராறு ஏற்பட்டு சிவகாசி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சந்தியா புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் இருவரையும் அழைத்து விசாரணை நடத்தினர். பின்னர் இருவரும் 6 மாதம் பிரிந்து வாழ்வதாக ஒப்புக்கொண்டு தனித்தனியாக வசித்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் கணேசன் தனது மனைவி சந்தியாவுக்கு போன் செய்து இன்று நமது திருமண நாள் கோவிலுக்கு செல்ல வேண்டும் நீ வா என்று அழைத்துள்ளார். இதனை தொடர்ந்து கணேசன், சந்தியா இருவரும் சிவகாசியில் உள்ள ஒரு கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டு விட்டு இருவரும் சென்று விட்டனர். இரவு வழக்கம் போல் சந்தியாவுக்கு போன் செய்த கணேசன் நான் தற்கொலை செய்து கொள்ள போகிறேன் என்று கூறிவிட்டு போனை வைத்து விட்டதாக கூறப்படுகிறது. தன்னை மிரட்டுவதாக நினைத்து சந்தியா வழக்கம் போல் இருந்துள்ளார்.

இதற்கிடையில் இரவு கணேசன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சந்தியா அளித்த புகாரின் பேரில் சிவகாசி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்