தற்குறி என்று யாரையும் சொல்லவில்லை - திமுக விளக்கம்

பெண் பாதுகாப்புக்காக திமுக அரசு பல்வேறு திட்டங்களை வகுத்து வருகிறது என்று டி.கே.எஸ்.இளங்கோவன் கூறியுள்ளார்.;

Update:2025-11-24 07:58 IST

கோப்புப்படம் 

காஞ்சிபுரத்தில் நடந்த கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் திமுகவை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். இதுகுறித்து, தி.மு.க. செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் கூறியதாவது:-

அண்ணா சொன்னதை தான் நாங்கள் செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம். அண்ணா சொன்னதில் இருந்து ஒரு துளி கூட நாங்கள் விலகவில்லை. தற்போது வரை மாநில உரிமைக்காக மத்திய அரசிடம் போராடிக் கொண்டிருக்கிறோம். இதைத்தான் அண்ணா சொன்னார். இதை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும் பின்பற்றி வருகிறார்.

கல்வி, உணவு, மருத்துவம், பெண் உரிமை, பெண் பாதுகாப்புக்காக திமுக அரசு பல்வேறு திட்டங்களை வகுத்து வருகிறது. அரசியலில் குற்றம் சொல்ல வேண்டும் என்பதற்காக ஏதையாவது சொல்வார்கள். தமிழ்நாடு மணிப்பூர் அல்ல. இங்கே பெண்களுக்கு எதிராக என்ன குற்றம் நடந்தாலும் உடனடியாக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. விஜய்க்கு அண்ணா யாரென்றே தெரியாது. முதல்-அமைச்சர் ஆகும் ஆசையில் அவர் இருக்கிறார்.

மக்கள் மயக்கம் அடைவதை பற்றி கவலைப்படாமல் இருந்தவர் விஜய். அவர் எங்களைப் பற்றி குறை சொல்வதற்கு அருகதை இல்லை. நாங்கள் யாரையும் தற்குறி என்று சொல்லவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்