வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிரான தி.மு.க. மனு இன்று விசாரணை

தமிழ்நாட்டில் சிறப்பு தீவிர திருத்தப்பணியை எதிர்த்து தி.மு.க. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.;

Update:2025-11-11 04:30 IST

புதுடெல்லி,

தமிழ்நாடு, மேற்கு வங்காளம் உள்பட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணியை தேர்தல் கமிஷன் தொடங்கி உள்ளது. தமிழ்நாட்டில் சிறப்பு தீவிர திருத்தப்பணியை எதிர்த்து தி.மு.க. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அந்த வழக்கு, நீதிபதிகள் சூர்யகாந்த், ஜோய்மால்யா பக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று (செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு வருகிறது. இதுபோல், பிற மாநிலங்களில் திருத்தப்பணிக்கு எதிராக பல்வேறு கட்சிகள் தாக்கல் செய்த மனுக்களும் அதே அமர்வில் இன்று விசாரணைக்கு வருகின்றன.

 

Tags:    

மேலும் செய்திகள்