பேசியும், படித்தும், எழுதியும் வளர்ந்த இயக்கம் திராவிட இயக்கம் - உதயநிதி ஸ்டாலின் பேச்சு
தீ பரவட்டும்’ என்று சொன்னால் இன்று கூட பலர் பயந்து நடுங்குகின்றனர் என துணை முமுதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.;
சென்னை,
சென்னை புத்தகக் காட்சியில் 2026ம் ஆண்டுக்கான ‘பபாசி’ விருதுகளை துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். அதனை தொடர்ந்து அவர் பேசியதாவது:-
49 ஆண்டுகளைத் தொட்டிருக்கும் சென்னை புத்தகக் காட்சியின் அறிவுப் பணி, பொன்விழா ஆண்டையும் கடந்து, இன்னும் பல நூற்றாண்டுகள் தொடரட்டும். விருதுகளைப் பெற்ற அனைவருக்கும் எனது அன்பும் - வாழ்த்தும். தமிழகம் முழுவதும் புத்தகத் திருவிழா நடத்த ரோல் மாடலாக சென்னை புத்தகக் காட்சி உள்ளது. இந்தியாவின் பதிப்பகத் தலைநகரமாக சென்னை உயர்ந்துள்ளது.
பேசியும், படித்தும், எழுதியும் வளர்ந்த இயக்கம் திராவிட இயக்கம்.அறிஞர் அண்ணா உலக வரலாற்று தலைவர்களின் கருத்துகளை கடிதமாக எழுதினார். அண்ணா அன்று பற்ற வைத்த அறிவுத் தீ இன்று வரை கொழுந்துவிட்டு எரிகிறது. அதனால்தான் ‘தீ பரவட்டும் என்று சொன்னால்' இன்றைக்கும்கூட சிலர் பயந்து நடுங்குகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.