விருதுநகர்: மேம்பால தடுப்புச்சுவர் மீது மினி வேன் மோதி கோர விபத்து - 2 பெண்கள் பலி

விபத்தில் 9 பேர் படுகாயமடைந்தனர்.;

Update:2026-01-19 17:23 IST

திருநெல்வேலியில் இருந்து பெண்கள் உள்பட 11 கூலித்தொழிலாளிகளை ஏற்றிக்கொண்டு கோவை மாவட்டம் பொள்ளாச்சிக்கு இன்று மினி வேன் சென்றுகொண்டிருந்தது.

இந்நிலையில், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள நெடுஞ்சாலையில் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த மின் வேன் மேம்பால தடுப்புச்சுவர் மீது மோதியது. இந்த கோர விபத்தில் மின் வேனில் பயணித்த 2 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 2 சிறுவர்கள் உள்பட 9 பேர் படுகாயமடைந்தனர்.

தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார், படுகாயமடைந்தவர்களை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். படுகாயமடைந்த 9 பேருக்கும் தீவிர சிசிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்