இருக்கன்குடி நீர்த்தேக்கத்தில் இருந்து நாளை முதல் தண்ணீர் திறப்பு
விருதுநகர் மாவட்டம் இருக்கன்குடியில் நீர்த்தேக்கம் உள்ளது.;
விருதுநகர் மாவட்டம் இருக்கன்குடியில் நீர்த்தேக்கம் உள்ளது. இந்த நீர்த்தேக்கத்தின் கொள்ளளவு 21 அடி ஆகும்.
இந்நிலையில், இருக்கன்குடி நீர்த்தேக்கத்தில் இருந்து நாளை முதல் 7 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக நீர்வளத்துறை செயலாளர் வெளியிட்ட அறிக்கையில்,
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வட்டம் இருக்கன்குடி நீர்த்தேக்கத்திலிருந்து தூத்துக்குடி மாவட்டம், எட்டையாபுரம் வட்டத்திலுள்ள முறைசார்ந்த கண்மாய்களான கீழ்நாட்டுக்குறிச்சி, அயன்வடமலாபுரம் மற்றும் மேலக்கரந்தை ஆகிய கண்மாய்களை சார்ந்த அப்பகுதி மக்களின் 1274.07 ஏக்கர் நிலங்களின் விவசாய தேவைக்காக 20.01.2026 முதல் 26.01.2026 வரையிலான 7 நாட்களுக்கு வினாடிக்கு 50 கன அடி வீதம் 30.24 மில்லியன் கன அடிக்கு மிகாமல் இருக்கன்குடி நீர்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறந்து விட அனுமதி அளித்து அரசு ஆணையிட்டுள்ளது. இதன் மூலம் தூத்துக்குடி மாவட்டம், எட்டையபுரம் வட்டத்திலுள்ள கீழ்நாட்டுக்குறிச்சி, அயன்வடமலாபுரம் மற்றும் மேலக்கரந்தை ஆகிய முறை சார்ந்த கண்மாய்களின் 1274.07 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.