கன்னியாகுமரியில் எம்.ஜி.ஆர் சிலை சேதம் - எடப்பாடி பழனிசாமி கண்டனம்
சிலையினை சேதப்படுத்தியவர்களுக்கும், பின்னணியில் உள்ள மறைமுக எதிரிகளுக்கும் கண்டனம் தெரிவித்துள்ளார்.;
சென்னை,
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில், பார்வதிபுரம் சந்திப்பில் அமைந்துள்ள மறைந்த முதல்-அமைச்சர், கழக நிறுவனர், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். திருவுருவச்சிலையின் கை பகுதியினை நேற்று இரவு (25.10.2025) சில விஷமிகள் சேதப்படுத்தியுள்ளனர்.
எங்களது இதயதெய்வம், புரட்சித்தலைவரின் திருவுருவச் சிலையினை சேதப்படுத்தியவர்களுக்கும், பின்னணியில் உள்ள மறைமுக எதிரிகளுக்கும் எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.
இதுகுறித்து காவல்துறை விரைந்து விசாரணை மேற்கொண்டு தவறிழைத்தவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.