எடப்பாடி பழனிசாமி பொய் கனவு காண்கிறார் - எ.வ.வேலு
அதிமுக தலைமையிலான கூட்டணி 2026 பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார்.;
சென்னை,
200 தொகுதிகளில் வெல்வோம் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பகல்கனவு காண்கிறார். அதிமுக தலைமையிலான கூட்டணி 2026 பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும். நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்களிக்க வேண்டும் என அதிமுக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார்.
எடப்பாடி பழனிசாமி கருத்துக்கு பதிலடி கொடுக்கும் விதமாக சென்னையில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
தமிழகத்தில் 200 தொகுதிகளுக்கு மேல் திமுக வெல்லும் என்ற தமிழக முதல்வரின் கனவு, நிச்சயிக்கப்பட்ட கனவு, வெற்றி பெறுகின்ற கனவு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிதான் '200க்கும் மேற்பட்ட இடங்களில் வென்று அதிமுக ஆட்சி அமைக்கும்' என பொய் கனவு கண்டு வருகின்றார் என்றார்.