செங்கோட்டையன் ஆதரவாளர்கள் 40 பேரின் கட்சி பொறுப்புகள் பறிப்பு- எடப்பாடி பழனிசாமி அதிரடி
ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டம், கோபிச்செட்டிப்பாளைய நிர்வாகிகளின் கட்சி பொறுப்புகள் பறிக்கப்பட்டுள்ளன.;
சென்னை,
அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் அதிமுகவில் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார் செங்கோட்டையன். இது தொடர்பான நடவடிக்கையை 10 நாட்களுக்குள் எடுக்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமிக்கு கெடு விதித்தார். செங்கோட்டையன் கெடு விதித்த மறுநாளே, அவரது கட்சி பொறுப்புகளை எடப்பாடி பழனிசாமி பறித்தார். இதையடுத்து, அவரது ஆதரவாளர்களின் பொறுப்புகளும் பறிக்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பாக, கோபிச்செட்டிப்பாளையத்தில் உள்ள தன் இல்லத்தில் செங்கோட்டையன் தொடர் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில், செங்கோட்டையன் ஆதரவாளர்கள் மேலும் 40 பேரை அதிமுகவின் பொறுப்புகளில் இருந்து எடப்பாடி பழனிசாமி நீக்கியுள்ளார். ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டம், கோபிச்செட்டிப்பாளைய நிர்வாகிகளின் கட்சி பொறுப்புகள் பறிக்கப்பட்டுள்ளன. செங்கோட்டையன் ஆதரவாளர்கள் கட்சி பதவி தொடர்ந்து பறிக்கப்பட்டு வருவது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.