அன்புமணி ராமதாசுக்கு எடப்பாடி பழனிசாமி பிறந்தநாள் வாழ்த்து

அன்புமணி ராமதாசுக்கு எடப்பாடி பழனிசாமி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.;

Update:2025-10-09 12:49 IST

சென்னை,

டாக்டர் ராமதாசின் மகனும், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவருமான அன்புமணி ராமதாஸ் இன்று தனது 57-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அவருக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், பாமக தலைவர் அன்புமணிக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதைபோல அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அன்புமணிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அன்பிற்குரிய சகோதரர் அன்புமணி ராமதாசுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். சகோதரர் அன்புமணி ராமதாஸ் பூரண உடல்நலத்தோடும், நீண்ட ஆயுளோடும் தொடர்ந்து மக்கள் பணியாற்ற எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், “பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான, அண்ணன் அன்புமணி ராமதாசுக்கு, இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தெளிவான சிந்தனையும், தொலைநோக்குப் பார்வையும் கொண்ட தலைவர்களில் ஒருவர். மத்திய சுகாதாரத் துறை மந்திரியாக திறம்படச் செயலாற்றி, மக்கள் அன்பைப் பெற்றவர். அவரது மேலான மக்கள் பணிகள் என்றும் தொடர, இறைவனை வேண்டிக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்