நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை 20 காசுகள் சரிவு
ஒரு கிலோ கறிக்கோழியின் விலை ரூ.97 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது.;
நாமக்கல் மண்டலத்தில் நேற்று 525 காசுகளுக்கு முட்டை கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. இதனிடையே நேற்று நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் முட்டை கொள்முதல் விலையில், 20 காசுகள் குறைக்கப்பட்டு 505 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டது. இதன் காரணமாக இன்று (சனிக்கிழமை) நாமக்கல் மண்டல கோழிப்பண்ணைகளில் 505 காசுகளுக்கு முட்டைகள் கொள்முதல் செய்யப்பட உள்ளதாக பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.
மேலும் அவர்கள் கூறுகையில், ‘தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் தசரா பண்டிகையை முன்னிட்டும், புரட்டாசி மாதத்தையொட்டியும் முட்டை விற்பனை குறைந்துள்ளது. அதன் காரணமாக விலை குறைக்கப்பட்டுள்ளது. ஆனால் முட்டை இருப்பு இல்லை. அதனால் ஓரிரு நாட்களில் மீண்டும் முட்டை விலை அதிகரிக்கும்’ என்றனர்.
அதேபோல் நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி ஒரு கிலோ ரூ.95-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. பின்னர் நேற்று பல்லடத்தில் நடந்த கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், அதன் விலையில் ரூ.2 உயர்த்தப்பட்டு ஒரு கிலோ கறிக்கோழியின் விலை ரூ.97 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது.
மேலும் முட்டைக்கோழி ஒரு கிலோ ரூ.107-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. பின்னர் நாமக்கல்லில் நடந்த முட்டைக்கோழி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், அதன் விலையில் ரூ.3 உயர்த்தப்பட்டு ஒரு கிலோ முட்டைக்கோழியின் விலை ரூ.110 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது.