தூத்துக்குடியில் கொலை வழக்கில் முதியவருக்கு ஆயுள் தண்டனை
முன்விரோதம் காரணமாக குரும்பூர் பகுதியில் நடந்த கொலை வழக்கில் மேலபுதுக்குடி பகுதியைச் சேர்ந்த முதியவரை குரும்பூர் போலீசார் கைது செய்தனர்.;
தூத்துக்குடி மாவட்டம், குரும்பூர் மேலபுதுக்குடி பகுதியைச் சேர்ந்த அருணாச்சலம் மகன் மூக்காண்டி (வயது 70) என்பவரை கடந்த 19.12.2015 அன்று முன்விரோதம் காரணமாக குரும்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வைத்து கொலை செய்த வழக்கில் மேலபுதுக்குடி பகுதியைச் சேர்ந்த பால்பாண்டி மகன் ஜெயபால்(65) என்பவரை குரும்பூர் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.
இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி தாண்டவன் நேற்று (2.6.2025) ஜெயபாலுக்கு ஆயுள்தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
இவ்வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய குரும்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்ககிருஷ்ணன் மற்றும் குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் ஆனந்த் கேப்ரியல்ராஜ், விசாரணைக்கு உதவியாக இருந்த ஏட்டு எப்சி ஆகியோரை மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட்ஜான் பாராட்டினார்.