தேர்தல் செயலியை மேம்படுத்தும் கருத்துகளை கூற வாய்ப்பு.. பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்த தேர்தல் கமிஷன்
பொதுமக்கள் வழங்கும் அனைத்து பரிந்துரைகளும் பரிசீலிக்கப்பட்டு, இத்தளம் மேம்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.;
கோப்புப்படம்
சென்னை,
இந்திய தேர்தல் கமிஷனின் இ.சி.ஐ. நெட் என்ற ஒரே செயலியில் தேர்தல் தொடர்புடைய 40 செயலிகள், இணையதளங்கள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. இச்செயலியை கூகுள் பிளேஸ்டோர், ஆப்பிள் ஆப் ஸ்டோர் மூலம் பதிவிறக்கம் செய்யலாம். இந்த செயலி, வாக்காளர் சேவைகளை மேம்படுத்துகின்றன. வாக்குப்பதிவு சதவீத விவரங்கள் விரைவாக வெளியிடவும் வழிவகை செய்கின்றன. தற்போது நடந்த பீகார் சட்டமன்றத் தேர்தல்கள், இடைத் தேர்தல்களில் இந்த செயலி வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.
தலைமைத் தேர்தல் அதிகாரிகள், மாவட்டத் தேர்தல் அதிகாரிகள், வாக்காளர் பதிவு அலுவலர்கள், கண்காணிப்பாளர்கள் மற்றும் கள அலுவலர்களின் கருத்துகளின் அடிப்படையில் இந்த தளம் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருகிறது. குடிமக்கள் வழங்கும் அனைத்து பரிந்துரைகளும் பரிசீலிக்கப்பட்டு, இத்தளம் மேம்படுத்தப்படும். இ.சி.ஐ. நெட் தளம் இந்த மாதம் அதிகாரபூர்வமாக தொடங்கப்படும்.
இந்த செயலியை எளிதாக அனைவரும் பயப்படுத்தக்கூடிய வகையில் மாற்றியமைக்க அனைத்து பொதுமக்களும் இச்செயலியைப் பதிவிறக்கம் செய்து, அதிலுள்ள ‘சப்மிட் எ சஜசன்' என்ற வசதி மூலம் வரும் 10-ந் தேதிவரை பரிந்துரைகளை வழங்கலாம் என்று தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்